பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அசாம் டிஎஸ்பி கைது!
அசாம்: சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது அசாம் பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அசாம் டிஎஸ்பியும், ஜுபின் கார்க் உறவினருமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுபின் கார்க் ஸ்கூபா டைவிங் செய்தபோது சந்தீபன் கார்க் உடனிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புலனாய்வு துறையினரின் தீவிர விசாரணைக்கு பின் சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement