தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் பிரிவில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் மீது ஜாமினில் வர முடியாத வழக்கு..!!

சென்னை: யூடியூபர் டி.டி.எஃப் வாசன் மீது ஜாமினில் வர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் டி.டி.எஃப் வாசனுக்கு ஏற்கனவே வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி திருச்செந்தூருக்கு காரில் சென்ற டி.டி.எஃப் வாசன் செல்போன் பேசியபடி சென்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Advertisement

குறிப்பாக காரை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டு சென்று அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டதாகவும் மதுரை மாநகரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பைக் ரேசரும், யூடியூபருமான டி.டி.எஃப் வாசன் மீது நேற்று 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதற்காக அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தார். இன்று காலை அவர் மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் கூடுதலாக 308 என்ற பிரிவில் அவருக்கு வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த 7 பிரிவுகளும் பிணையில் வரக்கூடிய பிரிவு என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது 8வது பிரிவாக (308)சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் ஒருவர் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் என்ற பிரிவு இதற்கு பிணை கிடையாது. எனவே அவர் மதுரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் போது அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட உள்ளார்.

 

Advertisement