நண்பரின் எதிரியை வெட்ட சென்ற வாலிபர் படுகொலை
*3 பேர் கைது
* 4 பேருக்கு வலை
தாம்பரம்: முடிச்சூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சூரியகாந்தி என்பவர் சந்தோஷின் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சந்தோஷ் தனது நண்பர்களிடம் கூறியதின்பேரில் அவரது நண்பர் விக்கி (எ) விக்னேஷ் உள்ளிட்ட 10 பேர் நேற்று முன்தினம் இரவு சூரியகாந்தி வீட்டிற்கு கத்தியுடன் சென்று, சூரியகாந்தியை வெட்டியுள்ளனர். அப்போது, சூரியகாந்தியின் அண்ணன் ராஜிவ்காந்தி மற்றும் அவரது உறவினர்கள், வெட்டிய நபர்களிடம் இருந்து 2 கத்திகளைப் அவர்களை விரட்டியதில் அந்த கும்பல் சிதறியோடியது.இதில், விக்கி (எ) விக்னேஷ் (20) மட்டும் தனியாக மாட்டிக்கொண்டதில், அவரை முடிச்சூர், சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சூரியகாந்தி (31), அமோஸ் (34) மற்றும் குமார் (24) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தி தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர். இதில் உயிரிழந்த விக்னேஷின் நண்பர்கள் 4 பேர் நேற்று மாலை சூரியகாந்தியின் நண்பரான லட்சுமிபுரம், கணபதி தெருவைச் சேர்ந்த நாத் (24) என்பவரது வாகனம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதோடு நாத்தை ஓடஓட விரட்டி வெட்டினர். இதில் மீட்கப்பட்ட நாத் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.