கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது திராவிட மாடல் அரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் எனச் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது நமது திராவிட மாடல் அரசு!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அரசு ஊழியர்களாக மக்கள் சேவையாற்ற வரும் 2,538 பேரை இன்று வாழ்த்தி வரவேற்றேன்!
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகியவற்றோடு நேர்மையாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு அவர்கள் துணை நிற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.