தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண் மூலம் ஆசைவார்த்தை காட்டி அதிமுக பிரமுகரை காரில் கடத்தி துப்பாக்கி முனையில் சித்ரவதை: 4 பேர் கும்பலுக்கு வலை

 

Advertisement

தூத்துக்குடி: இளம்பெண் மூலம் ஆசை வார்த்தை காட்டி அதிமுக பிரமுகரை காரில் கடத்தி பணம் கேட்டு துப்பாக்கி முனையில் சித்ரவதை செய்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். ‘குணம்’ கொண்ட இவர் முக்கிய திருவிழாக்கள், நிகழ்ச்சிகளின்போது தான் சார்ந்த கட்சி சார்பில் பெரிய அளவில் பேனர்கள் வைப்பார்.

அதில் அவரது படத்தை ஒரு ஓரத்தில் பெரிய அளவில் வைத்திருப்பார். அதனை பார்த்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக அவரை அணுகியுள்ளார். அதிமுக பிரமுகரும் இளம்பெண்ணின் பேச்சில் மயங்கினார். அவரிடம் ஜாலியாக இருக்க திட்டமிட்டார். தொடர்ந்து இளம்பெண்ணும், அதிமுக பிரமுகரும் செல்போனில் பேசி வந்த நிலையில் இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் அவரை தூத்துக்குடி வரச்சொல்லியுள்ளார். இதையடுத்து அவர் பைக்கில் புறப்பட்டார்.

திருச்செந்தூர் பகுதியில் பைக் சென்றபோது சொகுசு காரில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். தொடர்ந்து அவரது கண், கால், கைகளை கட்டி சிறிது தூர பயணத்திற்குப்பின் தேரிப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு அவரை தாக்கி துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி தேரி மணலில் தலை மட்டும் தெரியும் அளவிற்கு புதைத்து வைத்து தாக்கியுள்ளனர். மேலும் அவரை நிர்வாண நிலையில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். நீண்ட நேரம் அவரைத் தாக்கி ரூ.50 லட்சம் பணம் கொடு; கொடுக்காவிட்டால் இங்கேயே உன்னை சுட்டுக்கொல்வோம்.

இல்லையெனில் நிர்வாண போட்டோக்கள் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.இதனால் பதறிப்போன அவர் அவரது நண்பர்கள், தொழில் பழக்க வழக்கத்தில் உள்ளவர்களிடம் ரூ.50 லட்சம் அவசரமாக வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், யாருமே தரவில்லை. இதனால் கடுப்பான கடத்தல் கும்பல் மீண்டும் நாலு சாத்து சாத்தி அவரை அங்கேயே விட்டுவிட்டு செல்போன் உள்ளிட்ட கிடைத்ததை பறித்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அதிமுக பிரமுகர் அவரது நண்பர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசிய ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் போலீசார் அதிமுக பிரமுகரிடம், துப்பாக்கிமுனையில் கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News