தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலியின் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் கைது: 2 குழந்தைகளுடன் இளம்பெண் ஓட்டம்

கிருஷ்ணகிரி: கள்ளக்காதலியின் கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 குழந்தைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜா சுகன்(30), அவரது மனைவி கிரண்(27). இவர்களது வீட்டருகே வசிக்கும் முகேஷ்(30) என்பவருடன், கிரணுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 4 நாட்களுக்கு முன், முகேஷ் கிரண் மற்றும் அவரது 2 குழந்தைகளை, பீகாரில் இருந்து அழைத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வேலம்பட்டிக்கு வந்தார். அங்கு சக்திவேல் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில், கணவன், மனைவி என கூறி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளைப் பார்க்க ராஜா சுகன், பீகாரில் இருந்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

Advertisement

நேற்று முன்தினம் இரவு, மனைவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ராஜா சுகன், வேலம்பட்டிக்கு வந்தார். அங்கு, தனது மனைவி கிரண், முகேசுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அன்றிரவு கிரண் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மில்லில் இருந்து வெளியே சென்று விட்டார். நேற்று அந்த ஆலையின் அருகே உள்ள மாந்ேதாப்பில் ராஜா சுகன், மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கல்லாவி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், விரைந்து வந்த போலீசார், ராஜா சுகனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்ெகாண்டனர்.

இதுகுறித்து, ஆலை உரிமையாளரிடம் விசாரித்தபோது, ‘கடந்த 4 நாட்களுக்கு முன் முகேஷ், கிரணை வேலைக்கு அழைத்து வந்ததாகவும், முகேஷ் காலையில் இருந்தே வேலைக்கு வரவில்லை’ எனவும் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், முகேஷின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது, முகேஷ் கல்லாவியில் இருந்து பஸ்சில் ஊத்தங்கரைக்கு செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று, பஸ்சில் தப்ப முயன்ற முகேசை பிடித்து கல்லாவி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பீகாரில் இருந்த போதே கிரணுக்கும், முகேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மேலும், அங்கு சரியான வேலை இல்லாததால், அங்கிருந்து கிரணும், முகேசும் குழந்தைகளுடன் வேலம்பட்டிக்கு வந்து, சக்திவேலின் நெல் அரவை ஆலையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

பின்னர், மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அவரது கணவர் ராஜா சுகன், வேலப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு இருவரையும் ஒன்றாக கண்ட ராஜா சுகன், முகேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முகேஷ், ராஜா சுகனை கழுத்தை இறுக்கி கொலை செய்து, மாந்தோப்பில் வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 குழந்தைகளுடன் சென்ற கிரணை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News