இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு 50 சவரன் கொடுத்தால் தான் திருமணம் என கூறிய காதலன்
அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன், புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன், இன்ஸ்டாகிராம் மூலம், முகப்பேர் பகுதியை சேர்ந்த ஆதித்யன் (31) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினார்.
நான் ஏற்க மறுத்தேன். தொடர்ந்து வற்புறுத்தியதால் காதலிக்க ஆரம்பித்தேன். இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு என்னை அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். சில மாதங்கள் கழித்து, ‘நமது திருமணம் பற்றி எனது பெற்றோரிடம் பேசினேன். அதற்கு எனது பெற்றோர், 50 சவரன் நகை கொடுத்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என கூறிகின்றனர்,’ என ஆதித்யன் என்னிடம் கூறனார்.
எங்களால், 50 சவரன் போட முடியாது, என கூறினேன். அதற்கு ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர், ‘அப்படியென்றால் உன்னை திருமணம் செய்து கொள்ள முியாது. உன்னால் என்ன செய்ய முடியமோ செய்துகொள் என மிரட்டுகிறார்கள். எனவே, என்னை ஏமாற்றிய ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, ஆதித்யனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.