தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் சாதனை: தமிழ்நாடு அரசு பேட்டரி வீல்சேர் தந்து உதவிட வேண்டுகோள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியை சேர்ந்த ராஜா கவிதாவின் தம்பதியின் மகன் கோபிநாத். 7 ஆம் வகுப்பு படிக்கும்வரை மற்ற மாணவர்களை போல இயல்பாக பள்ளிக்கு சென்று வந்தார்.
8 ஆம் வகுப்பு படிக்கும் போது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அவர் பெற்றோரின் உறுதுணையுடன் பள்ளிக்கு சென்றுவந்தார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 531 மதிப்பின் பெற்று அசத்தினார். நீட் தேர்வு எழுதி 248 மதிப்பின் பெற்ற கோபிநாத் கடந்த ஆய்வுக்கு சென்று வந்தநிலையில் உடல் நிலை ஒத்துழைக்காததால் மருத்துவ கனவு சிதைந்தது.
இருப்பினும் விடாமுயற்சியுடன் அஞ்சல் வலி கல்வியில் ba பட்டப்படிப்பு முடித்த அவர் அரசு தேர்வுகளுக்கு தயாராகி வந்தார் ஆறு மாதங்கள் கண்ணும் கருத்துமாக படித்ததின் விளைவாக tnpsc குரூப் 2 எவிந் தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் பிரிவில் கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர் பணிக்கு மகன் தேர்வாகியுள்ளது அவரது பெற்றோரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திள்ளது.
பிறருக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வரும் கோபிநாத் பணிக்கு சென்று வரும் ஏதுவாக தமிழ்நாடு அரசு பேட்டரியில் இயங்கும் வீல் சர் வழங்கி உதவவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான சாய்வு தளம் இருப்பதால் அங்கு தனக்கு பணி வழங்கவேண்டும் எனவும் பணிக்கு சென்று வரும் ஏதுவாக பேட்டரி வாகனம் ஒன்றையும் வழங்கி தமிழ்நாடு அரசு உதவவேண்டும் எனவும் கோபிநாத் கோரிக்கைவிடுத்து உள்ளார்.