தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறு வயதில் பாலியல் தொல்லை தந்தார்கள்: குட்டி பத்மினி பேட்டி

சென்னை: தமிழ் சினிமாவில் நிலவும் பாலியல் தொல்லை குறித்து நடிகை குட்டி பத்மினி கூறியது: தமிழ் சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக உள்ளது. சின்னத்திரையிலும் அப்படித்தான். அதனால் பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி. துறை போன்று சினிமாவும் ஒரு தொழில்தான். இதனை ஏன் உடல் வியாபாரமாக மாற்றுகிறார்கள். இது மிகவும் தவறானது.
Advertisement

தமிழ் டிவி சீரியல்களில் பெண் நடிகர்களிடம் இருந்து இயக்குனர்களும் டெக்னீஷியன்களும் பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. அதேபோல், சில பெண்கள் நன்றாக சம்பாதிப்பதால் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்கிறார்கள். அதையும் மீறினால் நடிகர்களுக்கு தடை செய்யப்படும் சம்பவமும் நிகழ்கிறது. சின்மயிக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தேன். ஆனால் அவரை நடிகர் ராதாரவி சங்கத்தில் இருந்து நீக்கினார்.

ஸ்ரீரெட்டிக்கு உறுப்பினர் அட்டை கூட கொடுக்கப்படவில்லை. இதனால் அவரால் சீரியல்களில் நடிக்க முடியாத நிலை உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டால் எப்படி கொடுப்பது. வேண்டும் என்றால், சிபிஐ மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். குழந்தையாக நடிக்கும்போது கூட பாலியல் தொல்லை தருகிறார்கள். நான் குழந்தையாக நடிக்கும்போது இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டேன். என் அம்மாவிடம் சொல்லி இந்த பிரச்னையை எழுப்பியபோது 75% முடிந்த இந்தி படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement