வழக்குகளில் ஆஜராகும்போது இளம் வழக்கறிஞர்கள் முழு அளவில் தயாராக வேண்டும்: மூத்த நீதிபதி சுப்பிரமணியன் அறிவுரை
Advertisement
நிகழ்சியில் ஏற்புரையாற்றிய நீதிபதி சுப்பிரமணியன்,‘நீதிபதிகள் வருவார்கள் போவார்கள். நீதிமன்றம் நீடித்து நீதியை வழங்கும். மேலும், மனைவியை விட வழக்கறிஞர்களை அதிக அளவில் நம்பும் கட்சிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்குகளில் ஆஜராகும் போது முழு அளவில் தயாராகி வரவேண்டும். குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் முழு அளவில் தயாராக வேண்டும்,’ என்று அறிவுரை வழங்கினார். நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 55க குறைகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement