ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: கொலை அம்பலமானதால் மாறி மாறி வாக்குமூலம் அளித்த இளைஞர்
போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பார்த்த போது பெண்ணின் செல்போன் அழைப்பிற்கு யாரெல்லாம் பேசினார்கள் என்ற பட்டியலை எடுத்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண் பதிவாகி இருந்தது. அந்த பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பகுதியில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இளம்பெண்ணிடம் பேசிய வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக போலீசார் தெரிவித்தார்.
குறிப்பாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும். அதே போன்று உடலில் வெட் ஊசி செலுத்தி கொலை செய்ததாகவும், அதுமட்டுமில்லாமல் மலை பகுதிக்கு அழைத்து சென்று தள்ளி கொலை செய்ததாகவும் மாறி மாறி இளைஞர் வாக்குமூலம் அளித்தார். வாலிபர் இளம்பெண்ணை அழைத்து சென்று கொலை செய்ததாக கூறிய இடங்களுக்கு போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது சேலம் காவல் நிலையத்தில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினர் உதவியுடன் மலைப்பகுதிக்கு சென்று அப்பகுதியில் இருந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சம்பவம் சேலம் ஏற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.