இது எங்க ஏரியா... உள்ள வராதே: 2 ஆண்டுகளில் 4 கிராண்ட்ஸ்லாம், அல்காரஸ் சின்னர் ஆதிக்கம்
* கார்லோஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர் ஆகிய இருவரும், கடந்த ஆண்டு 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் ஆளுக்கு இரண்டை கைப்பற்றினர். அதேபோல் இந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் தலா 2 பட்டங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
* நம்பர் ஒன் வீரராக, இந்த ஆண்டு முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸி ஓபனில் களம் கண்ட சின்னர், கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் இறுதியில் தோற்றதால், 65 வாரத்துக்கு பின், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
* உலக தரவரிசையில் 2வது இடத்தில் இருந்து விளையாடத் தொடங்கிய கார்லோஸ், இறுதி ஆட்டத்தில் நெம்பர் ஒன் வீரரை வீழ்த்தியதால் 1950 புள்ளிகளை அள்ளினார். அதனால் கார்லோஸ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.
* இதற்கு முன் கார்லோஸ் முதல் முறையாக 2022 செப்.12 முதல் 2023 ஜூன் 29 வரை 20 வாரங்கள் நெம்பர் ஒன் வீரராக இருந்தார். தொடர்ந்து 2023ம் ஆண்டு 3 முறை மொத்தம் 16 வாரங்கள் நெம்பர் ஒன் வீராக வலம் வந்தார்.
* இப்போது கார்லோஸ் 11540 புள்ளிகளுடனும், சின்னர் 10780 புள்ளிகளுடனும் உள்ளனர்.