யமஹா எம்டி 15
யமஹா நிறுவனம், எம்டி-15 மோட்டார் சைக்கிளின் டிஎல்எக்ஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில், 155 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 18.4 எச்பி பவரையும், 14.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் கிளட்ச் உடன் கூடிய 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் எப்இசட்-எஸ் எப்ஐ ஹைபிரிட் மோட்டார் சைக்கிளில் உள்ள டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.
இதனை புளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளலாம். பிரத்யேக ஆப்ஸ் மூலம் பராமரிப்பு தொடர்பான பரிந்துரைகள், பார்க்கிங் செய்துள்ள இடம், மைலேஜ் தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் தொழில் நுட்பமும் இடம் பெற்றுள்ளது. சில்வர் மற்றும் வயலெட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சார் என்எஸ் 200, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகியவற்றுக்குப் போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.