‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடியை பின் தொடர்வோர் 10 கோடியானது: எலான் மஸ்க் வாழ்த்து
Advertisement
இதில் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடி என்ற சாதனை எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இப்பட்டியலில் உலகில் அரசியல் தலைவர்களில் பாரக் ஒபாமாவுக்கு அடுத்து 2வது இடத்திலும், ஒட்டுமொத்தமாக 7வது இடத்தில் மோடி உள்ளார். இதற்காக, பிரதமர் மோடிக்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில், அதிகம் பின்பற்றப்படும் உலக தலைவராக இருப்பதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்!’ என வாழ்த்தி எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
Advertisement