வுஹான் ஓபன் டென்னிஸ் பெலிண்டாவின் வேகத்தில் மிரண்ட டானா வெகிக்
வுஹான்: வுஹான் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் அபாரமாக ஆடி வெற்றி பெற்றார். சீனாவின் வுஹான் நகரில், வுஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், குரோஷியா வீராங்கனை டானா வெகிக் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய பென்சிக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்லோவக் வீராங்கனை ரெபேகா ஸ்ரம்கோவா, ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா மோதினர். இந்த போட்டியில் இருவரும் சளைக்காமல் மோதியதால் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் போட்டியில் சிறப்பாக ஆடிய ரெபேகா அந்த செட்டை எளிதில் வசப்படுத்தினார். அதனால், 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரெபேகா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.