தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

2025-27 டபிள்யுடிசி சாம்பியன்ஷிப் தொடர் 18 டெஸ்ட்களில் இந்தியா மோதல்: 9 நாடுகளின் போட்டிகள் பட்டியல் வெளியானது

லண்டன்: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நடைபெறும் போட்டித் தொடர் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளில், 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடவுள்ளது.  ஐசிசியில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், நியுசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) 2025-27 தொடரின்போது 71 போட்டிகளில் மோதவுள்ளன. அதற்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இந்த தொடரின் முதல் போட்டி, வரும் 17ம் தேதி, இலங்கை - வங்கதேசம் இடையே இலங்கையின் காலே நகரில் துவங்கவுள்ளது. இத் தொடரில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணி 22 போட்டிகளிலும், இங்கிலாந்து 21 போட்டிகளிலும், அதற்கு அடுத்ததாக, இந்தியா 18 போட்டிகளிலும் மோதவுள்ளன. இந்தியா ஆடும் முதல் போட்டி, இங்கிலாந்துக்கு எதிராக வரும் 20ம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது. சமீபத்தில் முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடர் சாம்பியனான தென் ஆப்ரிக்கா, வரும் அக்டோபரில் பாகிஸ்தானுடன், தனது முதல் போட்டியாக மோதவுள்ளது.