நீதிபதியை விமர்சனம் செய்தது தவறு: சமூக வலைதளத்தில் இதுபோல யாரும் பதிவிட வேண்டாம்; கைதான டேவிட் வீடியோ வெளியீடு
சென்னை: நீதிபதியை ஆபாசமாக விமர்சனம் செய்த தவெகவை சேர்ந்த டேவிட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இனி இதுபோன்ற தவறுகளை யாரும் செய்ய வேண்டாம் என்று வேண்டுகொள் விடுத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியை சமூக வலைதளத்தில் ஆபாசமாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (25) என்பவர், தனது தவறை உணர்ந்து பொதுமக்கள் மற்றும் தவெகவினர்களுக்கு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘நான் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் புஷ்ணயிக்கனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் பெங்களூருவில் உள்ள ஒரு ஷோரூமில் பணியாற்றி வருகிறேன். தவெக ரசிகராவும், நடிகர் விஜய் ரசிகராகவும் உள்ளேன். தவெக கட்சியில் சேரவும் விண்ணப்பித்துள்ளேன். நான் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறேன்.
நான் வேலை முடிந்ததும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாராம், வாட்ஸ் அப் போன்றவை பயன்படுத்துவேன்.
கரூர் சம்பவ வழக்கில், நீதிமன்ற உத்தரவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதற்கு நான் தப்பான, தவறான, அசிங்கமான கமென்ட் போட்டிருந்தேன். அதற்காக இன்று என்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் பொதுமக்கள் யாரும்... தப்பான, தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. தவறான போஸ்டர்களும் போடக்கூடாது. எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட ேவண்டாம். இதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சாரி.... இனி இதுபோல் யாரும் பண்ண வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.