உலக இயன்முறை தினம் ஓபிஎஸ் வாழ்த்து
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக இயன்முறை தினமாக இந்த நாளில் இயன்முறை மருத்துவர்கள் அனைவருக்கும் உலக இயன்முறை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மனிதனுடைய உடல் இயக்கம் சில குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்படும்போது உடற் பயிற்சி, வெப்ப சிகிச்சை, உடற்பிடிப்பு, வருடுதல், தடவுதல் போன்றவற்றின் மூலம் உடல் இயக்கத்தினை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்கள் இயன்முறை மருத்துவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உடல் இயக்க குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் செயல்பாட்டுத் திறனை உடற்பயிற்சிகள் மூலம் வளர்த்து, பராமரித்து, மீட்டெடுக்கும் மருந்தில்லா மருத்துவப் பணியினை மேற்கொள்பவர்கள் இயன்முறை மருத்துவர்கள். உலக இயன்முறை தின நன்னாளில், இயன்முறை மருத்துவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும், அவர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.