உலக கோப்பை பயணம் தொடங்கியது
ஐசிசி பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்.30ம் தேதி முதல் இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 50நாட்கள் இருப்பதை உற்சாகப்படுத்தும் நோக்கில் போட்டிக்கான உலக கோப்பை பயணம் நேற்று தொடங்கியது.
அதற்காக மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ்சிங் ஆகியோர் தொடக்கத்தின் அடையாளமாக நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஐசிசி தலைவர் ஜெய் ஷா, தலைமை செயல் அலுவலர் சஞ்ஜோக் குப்தா உட்பட பலர் பங்கேற்றனர்.