தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்; ஓங்கி அடித்த ஜாஸ்மின் தங்கம் வென்று அசத்தல்

 

Advertisement

லிவர்பூல்: உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் போலந்து வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டனின் லிவர்பூல் நகரில் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, போலந்து வீராங்கனை ஜூலியா ஸ்ஸெரெமெடா உடன் மோதினார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை ஜூலியாவை, ஜாஸ்மின் அதிரடியாக குத்துக்கள் விட்டு திணறடித்தார். கடைசியில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜாஸ்மின் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, குத்துச் சண்டை போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் வெல்லும் 9வது இந்திய வீராங்கனையாக, ஜாஸ்மின் லம்போரியா உருவெடுத்தார். இதற்கு முன், மேரி கோம் 6 முறையும், நிஹாத் ஸரீன் 2 முறையும், சரிதா தேவி, ஜென்னி, லேகா, நீது காங்காஸ், லவ்லினா போர்கோஹெயின், ஸ்வீட்டி பூரா ஆகியோர் இந்தியாவுக்காக தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று நடந்த போட்டியில், 80 கிலோ எடைப்பிரிவில் மோதிய இந்திய வீராங்கனை நுபுர் ஷெரான் வெள்ளிப் பதக்கமும், 80 கிலோ எடைப் பிரிவு போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா ராணி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

 

Advertisement