உலக பாரா தடகளம்: 6 தங்கம் உட்பட 22 பதக்கம் வென்று இந்தியா சாதனை; 15 தங்கத்துடன் பிரேசில் முதலிடம்
புதுடெல்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 6 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. இதில் 104 நாடுகளை சேர்ந்த 2200 போட்டியாளர்கள், பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். 186 பதக்கங்களுக்காக இப்போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் உலக சாம்பியன்கள், சர்வதேச வீரர்கள் போட்டியிட்டனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4வது நாடு என்ற பெருமை பெற்ற இந்திய வீரர்கள், போட்டிகளின் முடிவில் 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 10வது இடத்தை பிடித்தது. பிரேசில் 15 தங்கம் உட்பட 44 பதக்கங்கள் பெற்று முதலிடத்தை பெற்றது. போட்டியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதற்கு முன், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 2019ம் ஆண்டு துபாயில் நடந்தபோது, இந்தியா 9 பதக்கங்கள் பெற்றிருந்தது. பின், 2024ல் ஜப்பானின் கோபே நகரில் நடந்த போட்டியில் இந்தியா, 6 தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்றது.
பதக்கங்கள் வென்ற நாடுகள்
ரேங்க் நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 பிரேசில் 15 20 9 44
2 சீனா 13 22 17 52
3 ஈரான் 9 2 5 16
4 நெதர்லாந்து 8 3 1 12
5 போலந்து 8 2 6 16
6 கொலம்பியா 7 10 4 21
7 பிரிட்டன் 7 5 13 25
8 இத்தாலி 7 1 3 11
9 அமெரிக்கா 6 9 12 27
10 இந்தியா 6 9 7 22