3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் போர் ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
இதேபோல் ரஷ்யாவின் வடக்கே வோரோனேஜ் பகுதியில் குடியிருப்புகள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் 93 டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தெற்கு உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் காயமடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 76 டிரோன்கள், 7 ஏவுகணைகளை ஏவி தாக்கியது. இதில் 60 டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணையை உக்ரைன் ராணுவம் இடைமறித்து அழித்து விட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.