வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் மாதம் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பரமாக வரிகளை விதித்தன. இதில் சீனா மீது அதிகளவு வரி போடப்பட்டது. அமெரிக்க பொருட்களின் மீதான வரியை சீனா 125% என உயர்த்தியது. பதிலுக்கு சீன பொருட்களின் மீதான வரியை அதிரடியாக 145% ஆக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. ஜெனிவாவிலும்,லண்டனிலும் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்ததையடுத்து வர்த்தக பதற்றம் தணிந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் டிரம்ப் அளித்த பேட்டியில், நான் சீனா செல்வது வெகு தொலைவில் இல்லை’’ என்றார்.