தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு மாலத்தீவு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

மாலே: மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் கவுரவ விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு மாலத்தீவின் அதிபர் முய்சுவை சந்தித்துப்பேசினார். இரண்டாவது நாளாக நேற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் மாலத்தீவின் துணை அதிபர் உஸ் ஹூசைன் முகமது லத்தீப்புடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
Advertisement

பிரதமர் மோடி மாலத்தீவு நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் அப்துல்லாவையும் சந்தித்துப்பேசினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, ‘நமது நாடாளுமன்றங்களுக்கு இடையிலான நெருங்கிய உறவு உட்பட ஆழமாக வேரூன்றிய இந்தியா-மாலத்தீவு நட்புறவு பற்றி இருவரும் பேசினோம். மாலத்தீவில் திறன் மேம்பாட்டை ஆதரிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கிறது’ என்றார்.

பின்னர் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். தொடர்ந்து மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். தலைநகரின் மையப்பகுதியில் உள்ள குடியரசு சதுக்கத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியை அதிபர் முய்சு மற்றும் அமைச்சர்கள் அன்புடன் வரவேற்றனர்.

சுமார் 50 நிமிடங்கள் நடந்த விழாவை பிரதமர் மோடி அதிபர் முய்சு அருகில் அமர்ந்து பார்வையிட்டார். விழாவில் குழந்தைகள் மற்றும் பாரம்பரிய கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், ராணுவ அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெற்றது.  முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,’உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் பல துறைகளில் நமது நாடுகள் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.

இது நமது மக்களுக்கு மிகவும் பயனுள்ள நன்மையை பயக்கும். வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த எதிர்நோக்குகிறோம். மாலத்தீவின் 60வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி இந்தியாவுக்கு திரும்பினார்.

Advertisement