சிங்கப்பூரில் மே 3ம் தேதி தேர்தல்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. பிரதமர் லாரன்ஸ் வோங் ஆலோசனையின் பேரில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இதற்கான அறிவிக்கையை வெளியிட்டார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது. இதனை தொடர்ந்து மே 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 23ம் தேதி தொடங்குகின்றது. கொரோனா தொற்று காலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிஏபி கட்சி 93 தொகுதிகளில் 83ஐ கைப்பற்றி பெரும்பான்மையை தக்கவைத்துக்கொண்டது.