வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,20 நிறுவனங்கள் ஈரானுடன் தடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இதில், 6 இந்திய நிறுவனங்கள் அடக்கம். அந்த நிறுவனங்கள் ஈரானில் இருந்து பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் அல்லது பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. இதனால், அந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது,என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அல்கெமிக்கல் சொல்யூஸ்ஷன் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்டிரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட், ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட், ரம்னிக்லால் எஸ். கோசலியா அண்ட் கம்பெனி, காஞ்சன்ஸ் பாலிமர் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்காவில் இனி வணிகம் செய்ய முடியாது.