2025, 2026ம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும்: சர்வதேச நிதியம் கணிப்பு
இது குறித்து ஐஎம்எப் ஆராய்ச்சித் துறை தலைவர் டெனிஸ் இகன் கூறுகையில், ‘‘இந்தியா உண்மையில் நிலையான வளர்ச்சியை கொண்டுள்ளது. இது, வலுவான நுகர்வு வளர்ச்சிக்கான சீர்த்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பொது முதலீட்டிற்கான ஊக்க நடவடிக்கைகள் மூலம் சாத்தியமாகிறது. இந்த வேகத்தை தக்க வைப்பதும், சமீபத்திய வளர்ச்சி செயல்திறனை தொடர்வதும் இந்தியாவுக்கு முக்கியம். மேலும், 2025ம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 3 சதவீதமாகவும், 2026ம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.