அமெரிக்க வணிக வளாகத்தில் 11 பேருக்கு கத்தி குத்து
அப்போது வணிக வளாகத்துக்குள் நுழைந்த 42 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது கத்தியால் குத்தினார். இதைக்கண்ட மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனிடையே வணிக வளாகத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.