உலக ஜூனியர் பேட்மின்டன் இலங்கையை வீழ்த்தி இந்தியா அசத்தல்
கவுகாத்தி: பிடபிள்யுஎப் உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கவுகாத்தியில் நடந்து வருகின்றன. எச் பிரிவில் நேற்று நடந்த, இலங்கை அணியுடனான போட்டியில் இந்திய அணி, அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, 45-27, 45-21 என்ற நேர் செட் கணக்கில் 2வது வெற்றியை எளிதில் பெற்றது.
Advertisement
மற்றொரு போட்டியில் ஹாங்காங் அணியை, 42-45, 45-28, 45-43 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணி வீழ்த்தியது. தவிர, மற்ற பிரிவுகளில் நடந்த போட்டிகளில், 14 முறை சாம்பியன் சீனாவும், முன்னாள் சாம்பியன் தென் கொரியாவும் 2வது வெற்றியை பதிவு செய்தன.
Advertisement