தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக கோப்பை டி.20 அட்டவணை வெளியீடு; சூப்பர் 8 சுற்றில் சேப்பாக்கத்தில் பிப். 26ல் இந்தியா-ஆஸ்திரேலியா மோத வாய்ப்பு

Advertisement

மும்பை: 10வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்த தொடருக்கான அட்டவணை நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. பிப். 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இந்ததொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதுகின்றன.இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் 8 சுற்றில்தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதும். லீக்கில் ஏ பிரிவில்இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

முதல் போட்டியில் இந்திய அணி மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்.12ம் தேதி டெல்லியில் நமீபியாவை சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் கொழும்பில் பிப். 15ம் தேதி நடக்கிறது. கடைசி லீக் போட்டியில்நெதர்லாந்தை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, மும்பை டெல்லி மற்றும் கொழும்பு கண்டியில் போட்டிகள் நடைபெற உள்ளது. லீக்சுற்றில் 40, சூப்பர் 8 சுற்றில் 12, அரையிறுதி 2, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்க உள்ளது. மார்ச் 4ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அல்லது இலங்கை முன்னேறினால் அப்போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும். இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை எனில் அப்போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும். மார்ச் 5ல் 2வது அரையிறுதிப் போட்டி மும்பையில் நடத்தப்படும்.

மார்ச் 8ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்பட்சத்தில் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லையெனில் அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் லீக் சுற்றில் 6 போட்டி, சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டி என மொத்தம் 7 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றில் இந்தியாவுக்கு சென்னையில் ஒரு போட்டியும் இல்லை.

ஆனால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றால் இந்தியா பிப். 26ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும்வாய்ப்பு உள்ளது. சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்ரிக்கா இடம்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. குரூப் 2ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை இடம்பெறக்கூடும்.

உலக கோப்பையில் அணியை வழிநடத்த ஆர்வமாக உள்ளேன்

இந்திய டி.20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: நாங்கள் மும்பை, டெல்லி அகமதாபாத் ஆகிய நல்ல இடங்களில் விளையாடுகிறோம். பிப்.15ம்தேதி பாகிஸ்தானுடன் மோதல் பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் அண்மையில் அவர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடினோம். மற்ற விஷயங்கள்பற்றி யோசிக்காமல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினோம். இதேபோல் உலக கோப்பையிலும் அவர்களுக்கு எதிரான போட்டி ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். டி20 உலகக் கோப்பையில் ஆடுவது ஒரு பெரிய சவால். இந்த முறை தலைமை தாங்குவதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்தியாவில் உலக கோப்பையில் ஆட அனைவரும் ஆர்வமாக உள்ளோம், என்றார்.

ஐசிசி விளம்பர தூதர் மிகப்பெரிய கவுரவம்

கடந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக 2026ம்ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரின் விளம்பர தூதராக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை அட்டவணை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரோகித்சர்மா, ஐசிசி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு பெரிய பாக்கியம். மிகப்பெரிய கவுரவம். கடந்த ஆண்டு இளம் வீரர்களுடன் நாங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை(சாம்பியன் பட்டம்) மீண்டும் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.

எனது 18 ஆண்டுகளில் 2 ஐசிசி கோப்பையை வென்ற அதிர்ஷ்டசாலி. டி.20 உலக கோப்பையில் ஒவ்வொரு வெற்றியும் ஒரு சிறப்பு வாய்ந்தது என்பதை அனுபவத்திலிருந்து சொல்ல முடியும். நான் 2007ல் ஒரு இளம் வீரராக பட்டத்தை வென்றேன். பின்னர் 2024ல் கேப்டனாக அதை உயர்த்தினேன். இதுவரை (டி20) உலகக் கோப்பைகளில் ஒவ்வொன்றிலும் விளையாடியதால், மறுபுறம் உட்கார்ந்து பார்ப்பது வித்தியாசமாக இருக்கும். நான் வீட்டில் உட்கார்ந்து பார்ப்பதற்குப் பழகி வருகிறேன்,” என்றார்.

Advertisement