உலக பேட்மின்டன் சிந்து வெற்றி வாகை
பாரிஸ்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீராங்கனை லெட்சனா கருப்பதேவனுடன் மோதினார். இப்போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து, 21-19, 21-15 எ்னற நேர் செட்களில் வென்றார். அதையடுத்து, காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.
Advertisement
Advertisement