உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் நைஜீரியா வீரர் வெற்றி: 8ம் இடத்தில் இந்தியாவின் அனிமேஷ்
Advertisement
ஹீட் 4 பிரிவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மற்றொரு நைஜீரியா வீரர் கன்யின்ஸோலா அஜாயி 10.09 நொடிகளில் ஓடி முதலிடம் பிடித்தார். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைத்த இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 10.28 நொடிகளில் போட்டி துாரத்தை கடந்து 8ம் இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள் இப்போட்டியில் 15ம் இடத்துக்கு கீழே வந்தனர்.
200 மீட்டர் ஓட்டப் போட்டியில் அனிமேஷ் 20.79 நொடிகளில் கடந்தார். இருப்பினும் அவரால் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. ஈட்டி எறிதல் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த தேசிய ஜூனியர் சாம்பியன் ஷகில் சில்வால், 77.52 மீட்டர் துாரம் எறிந்து ஒட்டு மொத்தத்தில் 7ம் இடம் பிடித்தார். நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை மவுமிதா மோண்டல், 6.34 மீட்டர் துாரம் தாண்டி 7ம் இடம் பிடித்தார்.
Advertisement