உலகின் சந்தையை ஆள வேண்டும்: 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
டெல்லி:ஆப்ரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 75 ஆண்டிகளாக நம்மை ஜனநாயகம் வழிநடத்திச் செல்கிறது. இந்திய சுதந்திரத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என பிரதமர் மோடி பேசிவருகிறார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி:
பாக். தீவிரவாதிகள், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தோருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. தீவிரவாதத்துக்கு நிதி அளித்து அதனை ஊக்கப்படுத்துவோரையும் அழிப்போம். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது. அணுசக்தி துறையில் மிக பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்த இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு எனது பாராட்டுகள். இந்தியாவுக்கு என்று விண்வெளி நிலையம் விரைவில் நிறுவப்படும். வெளிநாடுகளின் சமுக வலைதளங்களை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும்..? சொந்த நாட்டின் சமூக வலைதளம் குறித்து நமது இளைஞர்கல் கவனம் செலுத்த வேண்டும்; உலகின் சந்தையை இந்தியா ஆள வேண்டும்.
டிஜிட்டல் பேங்கிங் துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. வருமான வரி விலக்கால் நடுத்தர வர்கத்தினர் பயன்பெற்றுள்ளனர். தற்சார்பு என்பதே இந்தியாவின் முழக்கம். தற்சார்பு மூலம் முன்னேற்றம் பெறுவதே புதிய இந்தியாவின் முழக்கம். டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல. எரிசக்தி துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடையும். தகவல் தொழில்நுட்பம் முதல் சைபர் பாதுகாப்பு வரை தற்சார்பு நிலையை கொண்டுவருவோம். அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு கதவுகள் திறந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு துறையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டும்.