உலக வரைபடத்தை மாற்றுங்கள் - ஆப்பிரிக்காவிலிருந்து விநோத குரல் சேர்க்கை
எத்தியோப்பியா: உலக வரைபடத்தை மாற்றுங்கள் என குரல்கள் எழுந்துள்ளன. இதற்கு ஆப்பிரிக்கா நாடுகளின் அமைப்பான ஆப்பிரிக்கா யூனியனும் ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது உள்ள வரைபடம் நாடுகள் மற்றும் கண்டங்களை உண்மையான பரப்பளவை பிரதிபலிப்பு இல்லத்தில் தான் இந்த கோரிக்கைக்கு காரணம். தற்போது வரைபடத்தை 16 ஆம் நூற்றாண்டில் மெர்க்கேட்டவர் என்பவர் உருவாக்கினார். இதை தான் தற்போது வரை அரசு மற்றும் தனியார் துறையினர் பயன்படுத்தி வருகின்றன.
எனினும் இந்த வரைபடத்தில் நிலைநாட்டுக்கு மேலே ரஷ்யா, வட அமெரிக்கா போன்ற பகுதிகள் அவற்றின் உண்மையான அளவை விட பெரிதாக காட்டப்பட்டு உள்ளதாகவும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா போன்ற தென் பகுதிகள் அவற்றின் உண்மையான பரப்பளவை விட குறைவாக காட்டப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் மேற்கு தீ நாடுகள் ஆதாயம் அடைவதாகவும், அதே நேரம் ஆப்பிரிக்கா போன்ற தென் பகுதிகளுக்கு அரசியல் ரீதியாக பாதகம் ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் உள்ளன. எனவே இந்த வரைபடத்தை மாற்றி அமைத்து உண்மையான பரப்பளவு பிரதிபலிப்பு புதிய படத்தை அறிமுகம்படுத்த ஆப்பிரிக்கா நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.