தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கம்பத்தில் கட்டி வைத்து தொழிலாளி கொடூர கொலை: மொட்டையடித்து, கால்வாயில் சடலம் வீச்சு

 

Advertisement

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் காட்டுநாயக்கன் நகரை சேர்ந்த பழங்குடியின கூலி தொழிலாளி மணிமாறன் (26). இவர், சாலைகளில் உள்ள பழைய பொருட்களை சேகரித்து, அவற்றை கடையில் விற்று பிழைத்து வந்தார். இந்நிலையில், செங்குன்றம் அடுத்த எல்லையம்மன்பேட்டை - ஆவடி சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு மணிமாறன் பிளாஸ்டிக் பொருட்கள் திருடச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட தொழிற்சாலை ஊழியர்கள், மணிமாறனை பிடித்து அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து, இரும்பு ராடால் பயங்கரமாக தாக்கினர். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்றபோது, தொழிற்சாலையில் ரூ.6 லட்சம் திருடு போனதால், அதை கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறி, அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனிடையே, நேற்று காலை எல்லையம்மன்பேட்டை கிராமத்தில் உள்ள கால்வாயில் மணிமாறன் மொட்டை அடிக்கப்பட்டு, ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் காவல் நிலைய போலீசார், மணிமாறன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த உறவினர்கள் மணிமாறனை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தொழிற்சாலை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், மணிமாறனை தாக்கி கொலை செய்த தொழிற்சாலை உரிமையாளரின் மகன் சாயாத் பருக் (34), ஊழியர்கள் அப்துல் மாலிக் (40), விக்னேஷ் (27), அசோக்குமார் (29), செல்வகுமார் (36) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொழிற்சாலை உரிமையாளர் சலீம் ரகுமானை தேடி வருகின்றனர்.

 

Advertisement