பாதாள சாக்கடை அடைப்பு பணி விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி
Advertisement
திருவெறும்பூர்: திருச்சி அடுத்த திருவெறும்பூர் முத்துநகர் கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருச்சி மாநகராட்சி சார்பில் அடைப்பை சரிசெய்யும் பணியில் புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பூரை சேர்ந்த ரவி(38), சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு(32) ஆகிய இருவரும் நேற்று மதியம் 3.30 மணியில் 5 அடி ஆழத்தில் இறங்கி அடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருவெறும்பூர் தீயணைப்பு வீரர்கள் சென்று 2 மணி நேரம் போராடி 5.30 மணியளவில் ரவி , பிரபு ஆகிய இருவரது உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement