பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மரணம்
01:47 AM Aug 06, 2025 IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கணேஷ்பாபு (56). இந்நிலையில் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த போலீசார் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.