தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் வலுவான ஆஸி.யுடன் இந்தியா நாளை மோதல்

மும்பை: 13வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதின. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முறையே முதல் நாள் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்தன. இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின. அரையிறுதி போட்டி இன்று தொடங்கியது. கவுகாத்தியில் மாலை 3 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-தென்ஆப்ரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.

Advertisement

மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனும், நம்பர் 1 அணியுமான ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டுமெனில் இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும். பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதுகெலும்பாக உள்ளார். அவர் லீக் சுற்றில் 7 போட்டியில் ஒரு சதம் 2 அரைசதத்துடன் 365 ரன் விளாசி டாப்பில் உள்ளது. அவர் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியா நல்ல ஸ்கோரை எடுக்க முடியும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 175, ஹர்லீன் தியோல் 169 ரன் எடுத்துள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 151, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 141ரன்எடுத்துள்ளனர்.

லீக் சுற்றில் பிரதிகா ராவல் 308 ரன் அடித்த நிலையில் காயத்தால் அவர் விலகியது. பின்னடைவு தான். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷபாலி வர்மாவுக்கு நாளை ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். பவுலிங்கில் சுழல் தீப்தி சர்மா 15 விக்கெட் எடுத்துள்ளார். சரணி 11, கிராந்தி கவுட் 8 விக்கெட் எடுத்துள்ளனர். பவுலிங் தான் இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. சொந்த மண்ணில் ஆடுவது இந்திய அணிக்கு சற்று நம்பிக்கையை அளிக்கும். ஆஸி.யை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்குள் நுழைய இந்தியா போராடும்.

மறுபுறம் ஆஸ்திரேலியா, பேட்டிங், பந்து வீச்சில் அசுர பலத்தில் உள்ளது. கேப்டன் அலிசா ஹீலி 294, ஆஷ்லீ கார்ட்னர் 265,பெத் மூனி187, ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 185ரன் விளாசி உள்ளனர். பவுலிங்கில் அன்னாபெல் சதர்லேண்ட் 15, அலனா கிங் 13 விக்கெட் எடுத்துள்ளனர். எந்த இலக்கையும் எட்டும் வகையில் நீண்ட பேட்டிங் வரிசை, ஆல்ரவுண்டர்கள் இருப்பது ஆஸி.க்கு கூடுதல் பலமாகும். இதுவரை 9 முறை பைனலில் ஆடி உள்ள ஆஸ்திரேலியா 7 முறை பட்டம் வென்றுள்ளது. நாளை இந்தியாவை சாய்த்து 10 முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது. இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.

Advertisement