மகளிர் உலக கோப்பை போட்டி இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற வாழ்த்து: ஜி.கே.வாசன் அறிக்கை
சென்னை: மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற ஜி.கே.வாசன் வாழ்த்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐசிசி மகளிர் உலக கோப்பை அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அத்தனை வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள். ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபார ஆட்டத்தால் 127 ரன்கள் எடுத்தாலும், கேப்டன் ஹர்மன்ப்ர் கவுரின் திறமையான ஆட்டத்தாலும், இந்திய அணி வெற்றிக்கு அச்சாரமிட்டது பாராட்டுக்குரியது. மேலும் அடுத்து நடைபெற உள்ள இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று மகளிர் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கைப்பற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக வாழ்த்துகிறேன்.
Advertisement
Advertisement