மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தோல்வியை தவிர்க்க தெ.ஆ. போராட்டம்; வங்கதேசம் துல்லிய பந்து வீச்சு
விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 233 ரன் இலக்குடன் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, 25 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழந்து, 89 ரன்னுடன் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் 14வது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் வங்கதேசம், தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணியின் துவக்க வீராங்கனைகள் ரூப்யா ஹைதர் 25, ஃபர்கானா ஹோக் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த கேப்டன் நிகர் சுல்தானா 32, ஷர்மின் அக்தர் 50, ஷோபனா மோஸ்தாரி 9 ரன்னில் அவுட்டாகினர்.
50 ஓவர் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழந்து 232 ரன் எடுத்தது. அந்த அணியின் ஷோர்னா அக்தர் ஆட்டமிழக்காமல் 51 ரன்னுடன் களத்தில் இருந்தார். அதன் பின் 233 ரன் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. வங்கதேச வீராங்கனைகளின் துல்லியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் துவக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸ் ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில் கேப்டன் லாரா உல்வார்ட் 31 ரன்னில் அவுட்டானார். பின் வந்தோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 25 ஓவர் முடிவில் வங்கதேசம், 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்னுடன் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது.