மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 133 ரன்
கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் போட்டித் தொடரின் 16வது போட்டி, கொழும்பு நகரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள், பாக். வீராங்கனைகளின் துல்லிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் வீழ்ந்தனர். 25 ஓவரில் இங்கிலாந்து, 7 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், 31 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. 31 ஓவர் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்திருந்தது. டிஎல்எஸ் முறைப்படி, பாக். 31 ஓவரில் 113 ரன் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
Advertisement
Advertisement