தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கும் விழா

சேலம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலம், கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (16.09.2025) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் உறுப்பினர்களுக்கு 3500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் நேரடியாக வழங்கினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த பயனாளிகளுக்கு தி.நகர். சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (16.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் 768 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 13670 உறுப்பினர்களுக்கு ரூபாய் 105.60 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு மற்றும் சுய உதவிக் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார்கள்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார சுய சார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு சுமார் 4395 சுய உதவி குழுக்களுக்கு 401 கோடி 48 லட்சம் வங்கி கடனாக வழங்கப்பட்டு நகர்ப்புற ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டையின் மூலம் பேருந்துகளில் 25 கிலோ சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விலையின்றி எடுத்துச் செல்லலாம். கடன்களுக்கு முன்னுரிமை (பயிர் கடன், கால்நடைகடன், சிறு வணிக கடன், தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள் கடன்), கோ-ஆப்டெக்ஸில் 5 சதவீத தள்ளுபடி & ஆவின் கடைகளில், இ-சேவை மையங்களில் 10% சேவை கட்டணம் குறைவு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் அட்டைக்கு முதன்மை ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பி.ரியா அவர்கள், தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர்

முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி (தி.நகர்), அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்), சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) பிரித்திவ்ராஜ்.இ.ஆ.ப., மற்றும் மாமன்ற உறுப்பினர் ஏழுமலை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News