மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா நாளை மோதல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
விசாகப்பட்டினம்: 8 அணிகள் பங்கேற்றுள்ள 13வது மகளிர் (50ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும்போட்டியில் இந்தியா-தென்ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. முதல் 2 போட்டியில் இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா நாளை ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா பெரிதாக சாதிக்காத நிலையில் தீப்தி சர்மா 78, ரன் மற்றும் 5 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார். மறுபுறம் தென்ஆப்ரிக்கா முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 69 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்த நிலையில் 2வது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதற்கு முன் 33 ஒருநாள் போட்டிகளில் மோதியதில் 20ல் இந்தியா, 12ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளன. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது.