மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் நீண்ட மழையால் நின்ற போட்டி
கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் நேற்று, பாகிஸ்தான், நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான போட்டி மழையால் தடைபட்டது. மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 19வது போட்டி கொழும்பு நகரில், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசி பந்து வீசியது. முதலில் ஆடிய பாக். அணியின் துவக்க வீராங்கனைகள் ஒமைமா சொகைல் 3, முனீபா அலி 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின் வந்தோரில் சித்ரா அமின் 9, நடாலியா பெர்வேஸ் 10, கேப்டன் பாத்திமா சனா 2 ரன்னில் மோசமாக ஆடி அவுட்டாகினர். இடையில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் 36 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. 25 ஓவர் முடிவில் பாக். 5 விக்கெட் இழந்து 92 ரன் எடுத்திருந்தபோது, மீண்டும் பலத்த மழை பெய்ததால் போட்டி நீண்ட நேரம் தாமதம் ஆனது. அப்போது, ஆலியா ரியாஸ் 28, சிட்ரா நவாஸ் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நியூசி தரப்பில் லீ தஹுஹு 2 விக்கெட் வீழ்த்தினார்.