மகளிர் டி20 ஆஸி ஏ அணியிடம் இந்தியா படுதோல்வி
மக்கே: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா ஏ மகளிர் அணி, அதிகாரப்பூர்வமற்ற 3 டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் ஆடிய ஆஸி ஏ மகளிர் அணி, 20 ஓவரில், 4 விக்கெட் இழந்து 187 ரன் குவித்தது. பின்னர், 188 ரன் இலக்குடன் ஆடிய இந்திய துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 3, உமா சேத்ரி 0 ரன்னுடன் வீழ்ந்தனர்.
பின் வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 15.1 ஓவரில் இந்தியா 73 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், 114 ரன் வித்தியாசத்தில் ஆஸி அபார வெற்றி பெற்றது. மேலும், 3வது போட்டிக்கு முன்பே ஆஸி, தொடரை கைப்பற்றியது.