மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் காஃப்
சீனா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிக் உடன் மோதினார். முதல் செட்டை, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் பென்சிக் கைப்பற்றினார். 2வது செட்டை கடும் போராட்டத்துக்கு பின் 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் காஃப் வசப்படுத்தினார்.
Advertisement
தொடர்ந்து, வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய காஃப் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அதை தனதாக்கினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மன் வீராங்கனை இவா லிஸ், அமெரிக்க வீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லரை, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
Advertisement