கடந்த 4 ஆண்டில் மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி கடனுதவி: மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் படைத்த வருகிறது. சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-2022ஆம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி, 2022-2023ஆம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி, 2023-2024ஆம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,074.76 கோடி, 2024-2025ஆம் நிதி ஆண்டில் 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,189.87 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை யறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 18.07.2025 வரை 1,04,538 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13,58,994 உறுப்பினர்களுக்கு 9,113.24 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில் 19,26,496 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 சுய உதவிக் குழு மகளிருக்கு 1,21,415.40 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.