மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: மக்களவை மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியை வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என அறிவுறுத்தினார். மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி ஜெய தாக்கூர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாகராஜை சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை இருப்பது வேதனையானது என தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான தொகுதி வரையறைகள் செய்யப்படவில்லை என்றும் தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். அப்போது நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டு இட ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்துவது அரசின் பொறுப்பு என்று அறிவுறுத்தினார். அரசியலமைப்பின் முகவுரையில் அரசியல் மற்றும் சமூக சமத்துவம் வலியுறுத்தப்பட்டு இருப்பது சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மையினர் பெண்கள்தான் என்றார். சமூகத்தில் 48 சதவீதம் இருக்கும் பெண்களின் அரசியல் சத்துவம் தொடர்பானது இந்த வழக்கு என்று குறிப்பிட்டார். எப்போது தொகுதி வரையறை செய்யப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.