தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘‘100 பெண்கள் சக்தியுடன் நாங்கள் பயணிக்கிறோம்” ‘:‘மாற்றங்கள்’’ உண்டாக்கிய மாற்றம்!

100க்கும் மேலான பெண் தொழில் முனைவோர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாக ஒருவருக்கு ஒருவர் உதவி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் மாற்றங்கள் தன்னார்வலர் குழு. அத்தனை பேரையும் ஒன்றிணைத்து மிக அற்புதமாக இந்தக் குழுவை வழி நடத்தி வருகிறார் சுசித்ரா. “கடந்த ஐந்து வருடங்களாக பெண் களால் பெண்களுக்காகவே , பெண்களுக்கு உதவ உருவாக்கப்பட்டது இந்த மாற்றங்கள் குழு” பெருமையுடன் பேசத் துவங்கினார் சுசித்ரா.

Advertisement

மாற்றங்கள்... ?

“2020 ஆம் ஆண்டு பெண் தொழில் முனைவோர்கள் பலரும் ஒரு பிளாட்பாரம் இல்லாமல் தனித் தனியாக அவங்களுக்கு தெரிந்த வழியில் தொழில் செய்திட்டு வந்தவங்க பலரையும் ஒண்ணு சேர்த்து ஒரு குழுவாக சேர்த்தேன். ஆரம்பத்தில் என்னை பெரிதாக நம்ப மறுத்தாங்க. பிறகு தொழில் விருத்தி, வியாபாரம், வாடிக்கையாளர்கள் தொடர்புகள், சிறப்பு கண்காட்சிகள், எக்ஸ்போ இவை எல்லாம் நடத்தி மேற்கொண்டு கஷ்டமர்களை கொண்டு வந்தேன். தொடர்ந்து ஆன்லைன் வியாபாரம் தெரியாத மக்களுக்கு அதற்கான பயிற்சி வகுப்புகள், சமூக வலைதளங்களில் போஸ்ட் உள்ளிட்ட பலவும் கற்றுக்கொடுத்து அவர்கள் வியாபாரத்தை பெருக்க எங்களுக்குள் நாங்களே உதவி செய்திக்கிட்டோம். மேலும் 100க்கும் மேலான பெண்கள் என்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ஒரு பெண் 100 பேருக்கு சமம். ஒவ்வொருவரும் அவங்க கொண்டு வரும் கஸ்டமர்களிடம் மற்ற பெண்கள் செய்யும் புராடெக்ட்களைக் குறித்து அறிமுகம் கொடுத்து ஒருவருடைய வாடிக்கையாளரை மாற்றங்கள் குழுவுக்கான வாடிக்கையாளராகக் கொண்டு வர முயற்சிக்கிறோம். உதாரணத்திற்கு ஒருவர் வாசனை மெழுகுவர்த்தி பிசினஸ் செய்வார், அவரிடம் வரும் வாடிக்கையாளருக்கு அதனுடன் இணைந்த ஊதுபத்தி, சக்லேட், கேக் தேவைப்படலாம். மெழுகுவர்த்தி தயாரிக்கும் பெண்ணே அவரிடம் பேசி எங்களிடம் இருக்கும் மற்றவர்களின் பொருட்களுக்கும் வாடிக்கையாளரைக் கூட்டி வருவார். இது ஒருவருக்கு ஒருவர் பகிர்தல் பிசினஸ் மற்றும் செயின் பிசினஸ் போல் மாறி எல்லோருக்கும் வருமானம் கிடைக்கும்.

கார்பரேட் கிஃப்ட் பாக்ஸ் குறித்து சொல்லுங்கள்

“ஒரு பாக்ஸ் ஆனால் 50க்கும் மேற்பட்ட பெண்களின் உழைப்பில் உருவான கிஃப்ட் பொருட்கள் அடங்கிய கார்பரேட் கிஃப்ட்ஸ்கள் கொடுக்கறோம். மெழுகுவர்த்திகள், கிராஃப்ட் பொருட்கள், கேக், சாக்லேட், பேனா ஸ்டாண்ட்கள் போன்றவை அடங்கிய கிஃப்ட்ஸ்க்கு எங்க கிட்ட நிறைய கம்பெனிகள் ஆர்வம் காட்டறாங்க. என்னென்ன பொருட்கள் கிஃப்ட் பாக்ஸில் வைக்க முடியும் என்கிற பட்டியல் கொடுப்போம் அதிலிருந்து அவங்க தேர்வு செய்கிற பொருட்களுக்கு ஏற்ப பாக்ஸ் தயார் செய்து அதற்கு விலை நிர்ணயம் செய்வோம். ஒருமுறை ஒரு பெண் வரும் ஆர்டருக்கு வேலை செய்தால் அவர் மீண்டும் மூன்றாம், நான்காம் முறைதான் சுழற்சியில் இணைவார். எல்லோருக்கும் சரிசமமாக வாய்ப்புக் கொடுத்தால்தான் ஆரோக்கியமாக குழு செயல்படும். ஸ்வீட், கேக், சாக்லேட்டுகள் எல்லாமே எந்த கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான வீட்டுத் தயாரிப்புகளாகதான் சேர்ப்போம்.

அடிப்படை சுய தொழில் செய்யும் பெண்களுக்கு அடுத்த கட்ட பயிற்சிகள் அளிப்பதுண்டா?

“நிச்சயம் உண்டு. மேலும் அரசு, தனியார் சார்ந்த பயிற்சி வகுப்புகள் எங்கே நடந்தாலும் , ஏன் எந்த ஊரில் நடந்தாலும் கூட கூட்டாக சேர்ந்து நாங்கள் கிளம்பிவிடுவோம். யாருக்கு என்ன அப்டேட் தேவையோ, அல்லது ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் தொழில் சார்ந்து சில கருவிகள் வாங்க, மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடக்கவும் ஆவண செய்கிறோம். ஒருவருக்கு ஒருவர் வாட்ஸப் குழுவிலும் எங்கு என்ன எக்ஸ்போ நடந்தாலும் அது குறித்து பகிர்ந்து, உரையாடல் நடத்தி எப்படி பங்கேற்கலாம் என்கிற அனைத்துத் திட்டமும் செய்வோம். உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பெண்களுக்கு தரச்சான்று, மதிப்பீடு அங்கீகாரங்கள் பெறவும் ஆவண செய்கிறோம்’’

அடுத்து வரும் பண்டிகை காலங்களுக்கு என்னென்ன ஆலோசனைகள் செய்கிறீர்கள்?

“விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கடந்த நான்கு வருடங்களா கணேஷ் கிஃப்ட் பாக்ஸ் விற்பனை செய்கிறோம். அதில் சூழலுக்கு ஆரோக்கியமான களிமண் விநாயகர் சிலை, எருக்கு மாலை, அறுகம்புல், கற்பூரம், சாம்பிராணி, பத்தி, ஒரு வாசனை மெழுகுவர்த்தி, குடை, அலங்காரப் பொருட்கள் அடங்கிய கிஃப்ட் பாக்ஸ் தயார் செய்து வருகிறோம். ரூ. 499 விலையில் இருந்து இதன் பொருட்கள் சேர்க்கைக்கு ஏற்ப விலை மாறும். மேலும் தீபாவளி, நவராத்திரி, கிறிஸ்துமஸ்,, நியூ இயர், பொங்கல் வரை அன்பளிப்புகள், ரிட்டர்ன் கிஃப்ட்கள் என அனைத்தும் பரபரப்பாக செய்து வருகிறோம்''.

5 பெண் தோழிகள் ஒன்றிணைந்து நட்பாக தொடர்வதிலேயே பல சிக்கல்கள் வந்து செல்லும்… 100 பெண்கள், அதிலும் சுயதொழில் குழு எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்?

‘‘எனக்கு சின்ன வயதில் இருந்தே எனக்கு நானே சவால் வைத்துக்கொள்ள பிடிக்கும். அப்படிதான் இந்த மாற்றங்கள் குழு. எங்க குழுவிலேயே நிறைய பெண்கள் அடிப்படை கல்வி கூட கிடைக்காம இருக்காங்க. ஆனால் கௌரமா சுயமா சம்பாதிக்கிறாங்க. வீட்டில் கூட அவங்களுக்கு இப்போ மரியாதைக் கிடைக்கறதாகவும் சொல்றாங்க. வருமான சுதந்திரம் பெண்களுக்கு அவசியம். ஒருசிலர் எவ்வித ஐடியாவும் இல்லாமல் வந்து, இங்கே நாங்க கொடுத்த பயிற்சி மூலமாக சுயமாக ஒரு சிறு வருமானம் பார்க்கறாங்க. ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். நிறைய பேசிப் புரிய வைக்க வேண்டிய சூழல் இருந்தது. வெறும் நான் ஒருத்தி மட்டுமே இருந்த குழு இன்னைக்கு 100 பெண்கள் சக்தியாக மாறியிருக்கு. “எந்த கட்டணமும் இங்கே கிடையாது. மாற்றங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து குழுவாக ஒன்று பட்டு முன்னேறும் ஒரு அமைப்பு. யாரும் எங்கே இருந்தும் இங்கே சேரலாம். பயிற்சிகள் கூட முடிந்தவரை தொண்டு நிறுவனங்கள் நடத்துகிற இலவச பயிற்சிகள், முகாம்கள் இப்படிதான் நாங்க திட்டமிடுவோம். ஒருவேளை பயிற்சி கட்டணம் இருந்தால் விருப்பப்பட்டவங்க, தேவைபடறவங்க பணம் கட்டி சேரலாம். குழுவாக சேரும் போது ஒரு சலுகை கிடைக்கும் அதைப் பயன்படுத்திக்குவோம். நிறைய அரசு சார்ந்த பயிற்சிகள், தன்னார்வலர்கள் முகாம்களுக்கு அவங்களே எங்களுக்கு அழைப்புக் கொடுப்பாங்க. நாங்க எங்களுடன் இன்னும் சில புதியவர்களையும் சேர்த்துக் கூட்டிச் செல்வோம். பல தொண்டு அமைப்புகள் கூட எங்க பெண்கள் கிட்ட அன்பளிப்புகள் வாங்கி அவங்க நிகழ்சிகளுக்கு பயன்படுத்துவாங்க’’.

- ஷாலினி நியூட்டன்

 

Advertisement

Related News