ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: வீடியோ வைரலால் ரயில்வே அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொபைல் சார்ஜ் செய்வதற்கான சாக்கெட்டில் பெண் பயணி ஒருவர் மின்சார கெட்டிலின் ஒயரை செருகி நூடுல்ஸ் தயாரிக்கிறார். மேலும் அதே முறையை பயன்படுத்தி சுமார் 10- 15 பேருக்கு தேநீர் தயாரித்துக் கொடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement